Sunday, March 22, 2015

பார்த்திவம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

உங்களுடைய 'அறம்" அறக்கட்டளை"  உரையிலும், இன்றைய வென்முரசில் திரௌபதியின், உரையாடலிலும் வரும் ,பார்த்திவ' பரமானு ' - பற்றி வலைதேடலில், கிடைத்த சில தகவல்கள், இங்கே  நேரம் இருந்தால் படிக்கவும் 

சௌந்தர்ராஜன்

அன்புள்ள சௌந்தர்ராஜன்

இந்தவகையான சிந்தனைகளில் ஓர் அவநம்பிக்கை எனக்குண்டு. முதலில் எனக்கு அறிவியல் சரியாகத் தெரியாது. மேலும் மேலைநாட்டு அறிவியலின் முறைமையும் உருவகங்களும் முற்றிலும் மாறானவை என்றும் இந்திய மெய்யியல் உருவகங்களை அவற்றுடன் சமானமாக இணைத்து நோக்கமுடியாது என்றும் எண்ணுகிறேன்

பார்த்திவப்பரமாணு  என யோக மரபால் குறிப்பிடப்படுவது பிண்டத்தில் தன்னை தானிருக்கிறேன் என உணரும் முதல் அலகு. அது ஓர் அணு. உயிர் வந்து தீண்டும் பொருண்மையின் முதல்துளி அதுவே. தன்னை தானே பெருக்கி உயிராக ஆகும் விதை அது. அது ஓர் உருவகம் மட்டுமே

அணுவாக அது தொடங்குவதனாலேயே அந்த அணு உணரும் தன்னிலை ஆணவம் எனப்படுகிறது. மும்மலங்களில் முதலானது அது. அதை பல்வேறுவகையில் பலமரபுகள் விளக்கிச்செல்கின்றன.

ஜெ