கண்ணனுக்கும் கர்ணனுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது? கிருஷ்ணன் கண்டிப்பபாக கர்ணன் பற்றி அறிவான், அவனே யாதவர் முதல் சிறந்த வாரிசு என....ஆக சிறந்த மதியூகியான கண்ணன், கர்ணனை பாண்டவர் கௌவரவர் சண்டையிலிருந்து தள்ளியிருக்கச் செய்த முயற்சிகள் என்ன? அவவிருவரிடயே எவ்விதமான உறவு நிலவியது?
அர்ச்சுனன் கண்ணனின் நண்பன், அவனே கர்ணனின் முதற் எதிரி...இதன் பொருட்டு கண்ணனும் கர்ணனும் எவவாறு ஒருவரை ஒருவர் மதிப்பிட்டனர்?
மாஹாபாரதத்தில் எந்த அளவு இதை பற்றி உள்ளது என தெரியவில்லை, ஆனால் வெண்முரசு இது பற்றி விரிவாக பேசுமென தெரிகிறது.... கண்ணன் கர்ணனுக்காக மருத்தவர்களை அனுப்பியது குறிப்பிடதக்கதாக படுகிறது அதனாலேயே...
- நம்பி
குழுமவிவாதத்தில்