Tuesday, March 24, 2015

பிரளயநகரம்



ஜெ,

துவாரகையின் சித்திரத்தை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருந்தேன். துவாரகையை ஒரு பெரிய கனவு என்று சொல்லலாம். அது கிருஷ்ணனுடன் பிறந்து அவனுடனேயே கலைந்துவிட்டது. அது ஒரு புராணநகரம். அனால் அதை அன்றைய ஒரு அதிநவீன நகரமாக காட்டியிருக்கிறீர்கள். சீனர்களும் ஐரோப்பியர்களும் அராபியர்களும் எல்லாம் சேர்ந்து அதைக் கட்டியிருக்கிறார்கள். அந்த சித்திரமே கனவுபோல இருந்தது

அந்த பெரியநுழைவாயிலை சொல்லியிருக்கும் விதம் விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரத்தை ஞாபகப்படுத்தியது. விஷ்ணுபுரத்திற்கும் துவாரகைக்கும் நிறைய ஒற்றுமை. அதுவும் பிரளயத்தில் அழிந்ததுதானே? தோரணவாயிலும் அங்குள்ள மணியும்கூட விஷ்ணுபுரம் போலத்தான் இருந்தன

சாத்யகி அங்கே கிருஷ்ணனைக் காணும் காட்சியும் கண்டதுமே அவன் சாத்யகியை கவர்வதும்  அணைத்து  ஏற்றுக்கொள்வதும் நெகிழச்செய்தன

மதி