// கொஞ்சம் கொஞ்சமாக விள்ளர்க்கரியதை விளம்ப முயல்கிறேன் //
நோயின் காரணமாக இருட்டறையிலேயே பிறந்ததிலிருந்து வளர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் குணமடைந்து வெளிஉலகை காண தன் தந்தையோடு செல்வதைப்போல நாங்கள் உங்கள் கைபிடித்து கண்ணன் என்ற பேருலகை காண உங்களுடன் வருகிறோம். புல்லாய் புழுவாய் செடி கொடி மரங்களாய் பல்வேறு விலங்குகளாய் அவையனைத்தையும் தாங்கி நிற்கும் ஐம்பெரும்பூதங்களாய், அனைத்தும் உள்ளடக்கிய பிரபஞ்சமாய் விரிந்து விரிந்து செல்லும் அந்த மாயக்கண்ணனை எங்களுக்கு காட்டுங்கள். ஒன்றும் அவசரமில்லை. எங்கள் வாழ்நாள் நேரம் முழுதும் இதற்காகத்தான். தத்தி தடுமாறியாவது உங்களுடன் நாங்கள் வருவோம். எங்கள் அறியாமையில் விளையும் அற்பமான கேள்விகளையும் கவனச்சிதறல்களையும் மன்னித்து அந்தக் கரியவனை காட்டுங்கள். எங்களுடைய சின்னஞ்சிறு கண்களால் முடிந்த அளவு அவனை காண முயல்கிறோம். த.துரைவேல்