Monday, March 23, 2015

கண்ணனோடு உலவுதல்:



காற்றைப்போல கண்ணன்போகும் வழியில் அனைத்தையும், செடி கொடி மரம் விலங்குகள் மனிதர்கள் என எந்த வேறுபாடும் காணாமல்  தழுவிகொள்ளும் தென்றல் அவன். அந்த தென்றலை போல அவன் அறியாத ஒன்றென எதுவும் இல்லைசிறுவனாய் இருக்கையில் இடையர் இல்லங்களில் சுதந்திரமாக  உள் நுழைந்து விளையாடி குறும்புகள் செய்வதைப்போல அனைவரின் மனங்களுக்குள்ளும் ஊடுருவி அவர்களின் மன எண்ணங்களை கலைத்து விளையாடும் கள்ளன். கைகளில் அகப்படும் பொருட்களையெல்லாம் பொம்மைகளாக்கி விளையாடும் குழந்தையைப்போல எதிரில் வரும் அனைவரையும் காய்களாக்கி சதுரங்கமாடும் விளையாட்டுப்பயல். எல்லா செயல்களும் அவனால் தான் நடந்தாலும் எந்தப்பழியும் கொள்ளாத ஏய்ப்பன். 

அந்தக் கண்ணன் என் தோள்  மேல் கைபோட்டிருக்க அவனுடன் உலவுதல் போல ஒரு நெருக்கத்தை தருகின்றது  ஜெயமோகனின் எழுத்துமகிழ்விலும் நன்றியிலும் நான் ஜெயமோகனின் கைகளை என் கண்களில் ஒற்றிக்கொள்கிறேன் 

தண்டபாணி துரைவேல்