அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு,
வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.. இணையதளத்தில்தான். இதில் வரும் முன்னறிவிப்பு உத்திகள், மூல நூலிலும் இதேபோன்றே பயன்படுத்தப்பட்டதா? சான்றாக, சாத்யகி, புரூரவஸைப் பற்றி நினைக்கும் காட்சி. ஏனெனில், நான் மூல பாரதத்தைப் படித்தது இல்லை. மற்றபடி, நூல் மிக நன்றாக வருகிறது. ஒவ்வொரு காட்சி சித்தரிப்பும், கதை மாந்தர்களின் கண்களுக்கு தெரியாத கோணத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து பார்ப்பது போல் கண் முன்னே விரிகின்றது.
உங்களின் சிறப்பே இதுதானே!.
நன்றி. தயானந்த் |
அன்புள்ள தயானந்த்
மூலத்தில் இவர்கள் இவ்வளவு பெரிய கதாபாத்திரங்கள் அல்ல. இது மகாபாரதம் அல்ல, வெண்முரசு என்னும் நாவல். மகாபாரதம் இதன் அடிப்படை மட்டுமே
ஜெ