ஜெ,
பூரிசிரவஸின் மனம் ஓடும் விதத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அவனால் முகங்கலையும் நிலங்கலையும் நினைத்து எடுக்கமுடியவில்லை. அவை அவன் மனதுக்குள் வகை வகையாக புரண்டு கிடக்கின்றன. அவற்றை அவனால் எடுக்கமுடியவில்லை. அவை தன்னிச்சையாக நினைவுக்கு வருகின்றன. அந்த ஒழுங்கிலே அவன் அறியாத அவனுடைய அகமனதின் ஒழுங்கு இருக்கிறது. அது என்ன என்பது சொல்லப்படாமல் வாசகனுக்கே விடப்பட்டிருக்கிறது
வெண்முரசில் உள்ள அழகு என்பதே இவ்வாறு விடப்பட்டிருக்கும் இடங்கள்தான் என்ற எண்ணம் எனக்கு வந்தது. இப்படி மனசு, அகமனசு சமப்ந்தமான பல இடங்கள் விடப்பட்டிருக்கின்றன. எப்போது பாலைவனம் ஞாபகம் வருகிறது எப்போது மலையுச்சி ஞாபகம் வருகிறது என்பதில் உள்ள அந்த ஒழுங்கு நுட்பமானது. பல இடங்களில் அட என்று எண்ணிக்கொண்டேன்
அதேபோல எங்கே விஜயை நினைவுக்கு வ்ருகிறாள் எங்கே தேவிகை நினைவுக்கு வருகிறாள் என்பதிலும் ஒரு விளையாட்டு உள்லது. மனசு போடும் விளையாட்டு. சிபிநாட்டு பாலைவனத்தில் அவன் விஜயையை கனவிலே பார்க்குமிடம் அட போடவைத்தது
சுவாமி
வண்ணக்கடல் பற்றி கேசவமணி
மழைப்பாடல் பற்றி கேசவமணி