ஜெ,
வெண்முரசில் திரௌபதியும் குந்தியும் இரண்டு எல்லைகளாக உருவாகி வருகிறார்கள்.
இரண்டுபேரும் ஒன்றுதான். ஆனால் குணாதிசயங்கள் வேறுமாதிரியும் இருக்கின்றன. இரண்டுபேரையும்
புரிந்துகொண்டால் மகாபாரதத்தையே புரிந்துகொண்டது மாதிரி. அம்மாவும் மனைவியும் இரண்டு
பக்கங்கள்தானே
இரண்டுபேருக்குமே கண்ணன் நெருக்கமானவனாக இருக்கிறான். குந்தி அவனிடம்தான் அப்படி
அழுகிறாள். திரௌபதி அவனிடம்தான் தன்னுடைய அந்தரங்கமான கனவுகளைப்பகிர்ந்துகொள்கிறாள்.
அவன் இரண்டுபேரையும் வைத்து விளையாடுகிறான். அவர்கள் அவனை வைத்து விளையாடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள்
நுட்பமான விளையாட்டுக்கள் நிறைந்த இந்த அத்தியாயங்களை பலமுறை வாசித்து புரிந்துகொள்ளவேண்டியிருந்தது
ரகுராமன்