ஜெ,
துச்சளை, பிரேமை , விஜயை முதலிய இளவரசிகளுக்கு நீங்கள் அளிக்கும் இடம் உண்மையிலே மகாபாரதத்தில் உண்டா என்று தெரியவில்லை. நாம் கேட்ட கதைகளில் சில பெண்களைத்தவிர பிற பெண்களுக்கு பெரிய இடமில்லாததாகவே தோன்றியது. பெரும்பாலும் அவர்கள் அபலைகளாகவே இருக்கிறார்கள். நீங்கள் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அளித்திருக்கும் இடம் பிரமிக்கச்செய்யக்கூடியதாக உள்ளது
எனக்கு தேவிகை,விஜயை இரண்டு பெண்களின் குணச்சித்திரமும் மனதுக்கு பெரும் உகப்பை அளிக்கக்கூடியதாக இருந்தது. எப்படி இருந்தாலும் பெண்கள் புனைவிலே தேவை. அழகை வர்ணிக்கிறோம். பெண்ணழகை வர்ணிக்காமல் எப்படி புனைவு முழுமையை அடையமுடியும்?
சண்முகம்