Sunday, March 15, 2015

நுண்மையின் மொழிவெளி



ஜெ,

ஒவ்வொரு அழகியும் ஒவ்வொரு வகையில் இருக்கிறார்கள். அழகிகளின் தோட்டம் போல இருக்கிறது வெண்முரசின் இந்தப்பகுதி. செறிவான தீவிரமான பகுதிகள் தேவைதான். ஆனால் இலக்கியத்திற்கு இந்தவகையான மென்மையான பகுதிகளும் தேவை. உலகம் முழுக்க பெரிய கிளாஸிக்குகளில் இருந்த அம்சம் உண்டு

சொல்லப்போனால் 80கள் வரை இருந்த ஒரு எழுத்துவகையிலேதான் மிகமிக அடர்த்தியான ஒருவகை எழுத்துமுறை இருந்தது. இப்போது அப்படி இல்லை. lucid ஆன எழுத்துமுறை மீண்டும் வந்துவிட்டது. உலக அளவில் இப்போது பேசப்படும் எழுத்தாளர்களெல்லாமே இப்படி எழுதக்கூடியவர்கள்தான். மிகச்சிறப்பான எழுத்து இப்படித்தான் இருந்தாகவேண்டியிருக்கிறது

எண்பதுகளுடன் வாசிப்பை நிறுத்திவிட்ட ஒருவருக்கு இந்தப்பகுதிகள் சற்று light ஆகத்தெரியும் என சில நண்பர்களுடன் பேசியபோது தோன்றியது. ஆனால் கவசம் அணிந்ததுமே மனநிலை மாறுபடுவது விவாதங்களின் உச்சம் அடையப்படுவது போன்ற micro narration கள்தான் இந்தவகையான எழுத்தின் உச்சம் அது அவர்களுக்குப்பிடிகிடைப்பதில்லை

சரவணக்குமார்