ஜெ
சகுனிக்கும் கிருஷ்ணனுக்கு இடையே நடக்கும் பகடையாட்டம் தூய்மையான கவிதை. கடவுளுக்கும் மனிதனுக்குமான பகடை. ஆகவே அது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் குறியீடாக உள்ளது
ஆணவம் கொண்டவன் வாழ்க்கையை படித்துப்புரிந்துகொண்டு பயிற்சி எடுத்து வெல்லலாம் என்று நினைக்கிறான். அப்போது தெரிகிறது வாழ்க்கையின் முடிவில்லாமை. கற்றுமுடியாது. ஆகவே தன் வாழ்க்கை அனுபவங்களை மட்டுமே பார்க்கலாம் என நினைக்கிறான்
ஆனால் வாழ்க்கை மிக மிக எளிமையாக இருக்கிறது. அதேசமயம் ஊகிக்க முடியாமலும் இருக்கிறது
அத்துடன் அது திரும்பத்திரும்ப நிகழ்கிறது. சலிப்புதான் அதன் இயல்பு
ஆனால் சலித்துவிட்டால் ஓர் இடத்தில் வந்து ஓங்கி அறைகிறது
கடவுளிடம் ஆட கொடுத்து வைத்தவர் சகுனி ஆனால் கடைசிக்கணத்தில் மொத்த ஆணவத்தையும் திரட்டி வாசலை மூடிவிடுகிறார்
நாமெல்லாம் செய்வதும் அதைத்தானே
சுவாமி