ஜெ,
கர்ணன் போருக்குச்செல்லும் இடத்தில் அவனுடைய ஆளுமை உருவாகித்தெரிவது சிறப்பு. அவன் பூரிசிரவஸை வந்து அணைத்துக்கொள்வதும் அவனுடைய பெருந்தன்மையும் ஒருபக்கம். போர்முனையில் அவன் அடையும் நிதானமும் ஒழுங்கும் பொறுமையும் இன்னொரு பக்கம்
இங்கே சொல்லப்படாதது இந்தப்போர் துரியோதனின் போர் என்பதுதான். கர்ணன் வழியாக அதை அவன் நிகழ்த்தினான். ஆகவேதான் கர்ணனை மீறி போருக்கு அவன் ஆணையிடுகிறான். கர்ணனின் சொல்லைக்கேட்டிருந்தால் போர் இப்படி நிகழ்ந்திருக்கது
கர்ணனின் தோல்விக்காக இத்தனை வருத்தமடைவது ஏன் என்றே தெரியவில்லை. அதில் ஒரு பெரிய சரிவு இருக்கிறது என்பதனாலா? அவன் ஆரம்பம் முதலே விதியால் வஞ்சனைசெய்யப்பட்டவன் என்பதனாலா?
திரௌபதியின் அந்தச்சேலையின் தரிசனம் பயங்கரமானது. அவன் அங்கேதான் செத்திருப்பான். அவனைக்கொன்றது அந்தப்புடவை
ஜெயராமன்