Thursday, March 26, 2015

கால பகடை விளையாட்டு



கிருஷ்ணனுக்கு பதில் எதிரில் காலமெனும் உருவமற்ற ஒன்றை கற்பனை செய்து கொண்டால் வருவது இந்த மானுட அல்லது பிரபஞ்ச விளையாட்டு. ஆடுபவன் ஒவ்வொருவனுக்கும் தான் ஆடுகிறோம் தான் யோசித்து நடத்துகிறோம் தான் வெல்கிறோம், தோற்கிறோம், வீழ்கிறோம், எழுகிறோம் என்கிற விதமாக பரவும் ஒரு மாய கண்ணாடியாக உருட்டு விளையாட்டு. சலிப்பு பரவும் அதே வேளையில் ஒருங்கி செய்ய வேண்டிய கட்டாயமும். உதறி விலக நினைத்தாலும் வெளியே வர முடியாத அல்லது  விடாத  ஒரு வித சிறை விளையாட்டு? தோற்கவும் இல்லாமல், வெல்லவும் இல்லாமல் ஓடும் ஓட்டம் தரும் அலுப்பு.?
கிருஷ்ணன் சடென்று வெளியே வந்தது ஒரு கண் திறப்பு. exiting while ahead அல்லது போதும் இந்த மாய கண்ணாமூச்சி ? ஆனால் எதிலும் உள்ளே நுழையும் போது இருக்கும் அதே கவர்ச்சி மற்றும் உத்வேகம் வெளியே வரும் இருக்க வேண்டும் போல .... சகுனி அப்பாடா என்று தளர்ந்து உட்கார்வது போல் அல்லாமல். அத்தனை கூர்மை கொண்டு முடிவு இல்லமால் விளையாட அவர் கிருஷ்ணன் அல்லவே?

இப்படி கணம் தோறும் அவன் விளையாடுவதும், கூர்மையாக அதே சமயம் இலை மேல் துளிர்த்து நிற்கும் நீர் என ஒட்டாமல் இருப்பதும் , ஒன்றில் மூழ்காமல் ஆனால் முழுமையாக அனுபவித்தபடியும், கரியவளின் நீண்ட விரல்- மணக்கும் கூந்தல்-சந்தனம் வீசும் உடல் ஆகியவைகளில் தன்னை மறந்தபடி ஆனால் கத்தி இறக்குவது போல தன் நகருக்கு போட்டியாக வருவதை பார்த்தபடி.... மாயன் மயக்கி கொல்கிறான். 

புதிய வாள் ஒன்றை மடியில் வைத்து பார்க்கும் போது வரும் துள்ளலும், வெறியும், கிளர்ச்சியும் போல பரவுகிறது இவனின் வரிகளில் பாயும் போது.... ...பார்த்தன் கொடுத்து வைத்தவன் 

அன்புடன்
லிங்கராஜ்