ஜெ சார்
கர்ணன் என் மனதில் சின்னவயதிலேயே ஆழமாகப் பதிந்த கதாபாத்திரம். ஆனால் எந்த மகாபாரதத்திலும் அவன் வாழ்க்கையைப்பற்றி இவ்வளவு விரிவான ஒரு சித்திரம் இல்லை. அவன் அங்கநாட்டை அடைந்தபிறகு நேராக போரில்தான் வருகிறான். ஆனால் அவனுடைய சொந்தவாழ்க்கையையும் அவன் படும் கஷ்டங்களையும் அவமானங்களையும் விரிவாக எழுதும் நாவல் இது ஒன்றுதான்
கர்ணனுடைய துயரத்தை புரிந்துகொள்கிறேன். அவனுக்கு அவன் யாரென்று தெரியும். ஆனால் சொல்லமுடியாது. ஆகவே அனைத்தையும் அவன் அமைதியாக அனுபவிக்கிறான். ஆனால் அவனுக்குள் தீ இருந்துகொண்டே இருக்கிறது. அதை நினைக்கையில்தான் அவன் ஒரு எரிமலை என்று தெரிகிறது
சிவராஜ்