மீண்டும்
அவர் வரைவது உளமார்ந்த மகிழ்ச்சி. படங்கள் வராத உங்களிடம் கேட்கலாமா என்ற
எண்ணம் எழுந்தது. பிறகு அது சரிதானா என்கிற தயக்கம். எதுவும் தெரியாத
நிலையில் அவருக்கு உடல் நலமில்லாது இருக்குமோ எனவும் தோன்றியது.
ஒரு சமயம், அவர் எதுவுமே வரையாமல் - அவர் உடல் நலம் பேணினால் அதுவே போதும் என்றும் தோன்றுகிறது (நீங்கள் கூறியது போலவே)
எனினும் - சர்மன் - கியாதி படம். அற்புதமான சித்தரிப்பு. நிழல் என்பது என்ன பற்றியும். நிழலுக்கும் ஒரு மனம் உண்டோ? கனவு காணுமோ?
நான்
விரும்பி பார்த்த - மிக பழைய - ஜாடோசி - பார்வையில்லா சமுராய் (zatochi:
Blind Swordsman) - அவன் நண்பன் சிவப்பு நிறத்தை ஒலி ரூபமாக தெரிவிப்பான்.
சாமுராயிடம் அவனிடம் கேட்பான் - பார்வையில்லாதவன், தூங்கும் போது எதனை
காண்பான்?
மீண்டும் பார்த்த போது எனக்கு தோன்றியது - திருதராஷ்டிரன் தூங்கும் போது கனவு கண்டிருப்பானா?
சண்முகவேல் அவர்களுக்கும் - உங்களுக்கும் நன்றி
அன்புடன் முரளி