Monday, January 8, 2018

துளி



ஜெ அவர்களுக்கு


வணக்கம்.

குருதிச்சாரல் அருமையாக  பொழிகிறது.. ஒவ்வொரு வார்த்தை துளியும் என் மேல் அழுந்தி நிற்கிறது..

இது வரை இல்லாத அளவு வரிக்கு வரி ஆழமாய், இருக்கிறது. குறிப்பாக, அசலையின் உரையாடல் திறன், வார்த்தை வீச்சு என்னை நேரில் பார்த்த உணர்வுக்கு ஆட்படுத்தியது... அசலை -பீஷ்மர் சந்திப்பு மிகச் சிறப்பாக, காலம் கடந்து நிற்கும் ஒரு உரையாடல்...



என்னை ஈர்த்த சில வரிகளை உங்களுக்கு தெரியப்படுத்த விருப்பம்.


"ஒவ்வொரு சுவரும் படிகளும் தூண்களும் வஞ்சத்துடன் முதியோரை சூழ்ந்திருக்கின்றன என்று."

இந்த ஒரு கேள்வி போதும், அசலையின் ஆளுமையை வெளிப்படுத்த
"“அத்தனை நொய்மையானதா உங்கள் நோன்பு?” "

"நினைவறிந்த நாள் முதலே ஒன்றிலிருந்து பிறிதொன்றென மாற்றுருக்களைத் தாங்கி இந்த மேடையில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். பிறருக்குமேல் எழுந்த தலைகொண்ட பெருவீரர். ஆனால் நீங்கள் செருவென்ற களங்கள் எவை? அன்னைக்கென நோன்பு பூண்டவர். ஆனால் அணுகிய அத்தனை பெண்களுக்கு முன்னாலும் தோற்றவர். பிறருக்கென துயர் தாங்குபவர், ஆனால் குடியை முற்றழித்த மூதாதை. அனைவராலும் புறக்கணிக்கப்படுபவர், மைந்தராலும் பெயர்மைந்தராலும் துயருறுபவர். ""

மிகப் பெரிய, நிகரற்ற ஒரு இலக்கிய ஆக்கத்தை நிகழ்த்துகிறீர்கள்..


மனம் கனிந்த வாழ்த்துகள் ஜெயமோகன்..

பவித்ரா..