Saturday, January 6, 2018

சஞ்சயனின் கதாபாத்திரம்



ஜெ,

சஞ்சயனின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் எப்படி இருக்கிறது, இப்போது இவ்வளவு இடைவெளிக்குப்பின் வரும்போது உருமாறியிருக்கிறதா என்று பழைய கதைகளைப் போய்ப்பார்த்தேன். அவனை இசைகேட்கவைக்க திருதராஷ்டிரர் முயல்கிறார். அவனுக்குச் செவியே இல்லை என்கிறார். அவன் அவருடைய இசையில் ஈடுபடாமல் இருக்கிறான். அப்படியே அதே கதாபாத்திரம் திரும்பவும் வருகிறது. வெறும் சாட்சி. ஒன்றிலும் ஈடுபடாதவன். அவன் தான் குருஷேத்ர போரை திருதராஷ்டிரருக்குச் சொல்லப்போகிறவன் என்னும் போது அவனுடைய அந்த அமைதியும் விரக்தியான நிலையும் நன்றாகவே புரிகிறது


ரவிச்சந்திரன்