Saturday, January 6, 2018

எழுதழல் வினாக்கள்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

சில விஷயங்கள் மற்றும் கேள்விகள்
1) எழுதழல்-12

தங்கள் "வாழும் கணங்கள் [http://www.jeyamohan.in/19762]" கட்டுரையின் சாரம் இந்த பகுதியில் அபிமன்யுவின் வார்த்தைகளில் வந்துள்ளது.

2)எழுதழல்-38

பரசுராமர் அமைத்த ஐந்து குளங்கள் பற்றிய குறிப்பு மழைப்பாடல்-1 வருகிறது. 

3) எழுதழல்-41 

உத்தரை, கிருஷ்ணன் கூறப்போகும் வேதத்தை ஒரு புதிய கோணத்தில் உணர வைக்கிறாள். 

4) எழுதழல்-60 

/////ஒருமுறை கனவில் வடபாஞ்சாலத்தின் அரசர் அஸ்வத்தாமரை பார்த்தேன். கங்கைநீர் நடுவே ஓர் ஆற்றிடைக்குறை அது. அவர் நீண்ட தாடி கொண்டிருந்தார். முதுமையில் தளர்ந்து தொய்ந்த இமைச்சதைகளும், பழுத்த கண்களும், சோர்ந்து உள்ளடங்கிய வாயும், ////
அஸ்வத்தாமன் சாபம் வாங்கிய பின் உள்ள நிலையை யௌதேயன் கனவு காண்கிறான். 

5) எழுதழல்-68 

////கைகளில் புல்லாழி கட்டப்பட்டது///

புல்லாழி என்றால் என்ன ?

6) எழுதழல்-72

////நம் கால் சென்று படுவது வரை நம்முடன் இருப்பவை நம்முடைய ஐயங்கள், அச்சங்கள், குழப்பங்கள். அவற்றை எண்ணி எண்ணி பெருக்கிக்கொள்வதில் என்ன பயன்? எது செயல்களமோ அங்கு சென்று இறங்குவதுவரை நாம் எண்ணுவது செயலைப்பற்றி அல்ல////

அர்ஜுனன் மதுராவிற்கு செல்லும் முன் சொல்வதும் அபிமன்யு பாணாசுரரை காணும் முன் சொல்வதும் ஒரே அணுகுமுறை.

7) எழுதழல்-75 

///காட்டுத் தெய்வங்களுக்கு முன் குலப்பழி நீங்க கூந்தல் அரிந்து வைப்பது உண்டு.///


இது தான் இப்போது மொட்டையடிக்கும் வழக்கமாக உள்ளதா ?


நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.


அன்புள்ள ராஜாராம்

புல்லாழி என்பது தர்ப்பைப்புல் மோதிரம். சடங்குகளுக்குப் போட்டுக்கொள்வது. வஞ்சத்தின்பொருட்டு, வேண்டுதலின்பொருட்டு முடிகளைவது இங்கே இருக்கும் தொன்மையான வழக்கம்

ஜெ