ஜெ
வெண்முரசு நாவலில் வெண்முகில்நகரத்தில் வரும் பூரிசிரவஸின் கதை ஒரு தனித்த அத்தியாயம். காதல்கதை என்றால் காதல்கதைதான். ஆனால் அது காதல் இல்லை. வெறும் பாலியல் கவற்சியா என்றால் அதுவும் இல்லை.அதற்குமேல் ஏதோ ஒன்று. அவன் அலைபாய்வதும் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத்தாவுவதும் அழகாகச் சொல்லப்பட்டிருந்தது
அவனுக்கு ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொன்றாக அர்த்தமாகிறார்கள் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால் அவனுக்கு அந்த மலைமகளாகிய பிரேமைதான அழகாக ‘செட்’ ஆகிறாள் என்றும் தோன்றியது
நிலக்காட்சிகள் அற்புதம். நீங்கள் லடாக் சென்று வந்ததன் விளைவு என்று எண்ணுகிறேன். இமையச்சரிவின் வரண்ட குளிர்ந்த நிலக்காட்சியை இப்படி காட்சியாக எங்கும் வாசித்ததில்லை
எப்ப்டியோ எல்லா நிலத்திலும் கதையை நடக்கவைத்து ஒரு பான் இண்டியன் தன்மையைக் கொண்டுவந்துவிடுகிறீர்கள்
சிவக்குமார்