ஜெ,
சாத்யகி பூரிசிரவஸைக் கனவிலே கான்பது ஒரு நுட்பமான அருமையான இடம். அதை முதலில் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. நட்சத்திரங்கலைப்பற்றி வருகிறது. ஒரு நட்சத்திரம் தலையிலே விழுந்து சாத்யகி செத்துக்கிடப்பதை சாத்யகியே பார்க்கிறான். அந்த சடலத்தை யார் பார்க்கிறார்கள் என்றால் பூரிசிரவஸ்
ஆனால் மகாபாரதத்திலே தலைவெட்டுபட்டு கிடப்பவன் பூரிசிரவஸ். கொன்றவன் சாத்யகி. அந்த விஷயம்தான் இப்படி தலைகீழாக கனவிலே வருகிறதா ? என்ன அர்த்தம் அந்தக்கனவுக்கு?
வானத்தால் நேரடியாகவே கொல்லப்பட்டவன் என்ற இடம் மனதை உலுக்கியது. சாத்யகியை வானம் எச்சரிக்கிறதா என்று நினைத்துக்கொண்டேன்
எவ்வளவு பெரிய கதை. எத்தனை பின்னல்கள். ஒவ்வொன்றாக வாசித்து முடிக்க ஒரு ஜென்மம் போதாது இல்லையா?
சிவராம்