Monday, March 9, 2015

எத்தனை கோட்டைகள்!



ஜெ,

தசசக்கரத்தின் சின்னஞ்சிறிய கோட்டையை நீஙகள் விவரித்திருப்பதைக் கண்டேன். கங்கை அருகே ஒரு சின்ன குன்று. அதை உள்ளடக்கி ஒரு கோட்டை. குன்றுகளை உள்லடக்கித்தான் இங்கே நிறைய கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. திருமயம் கோட்டைகூட அப்படித்தான். அதெல்லாம் காவல்கோட்டைகள் என நினைக்கிறேன்.

இதுவரை வந்த கோட்டைகலை எல்லாம் திரும்ப மனதில் ஓடவிட்டுப்பார்க்கிறேன். அஸ்தினபுய்யின் கோட்டை மிக தெளிவாக மனதிலே பதிந்திருக்கிறது. காந்தாரத்தின் கட்டிமுடிக்கப்படாத பெரிய கோட்டை. அதன்பிறகு மதுராவின் கோட்டை. அதைபிடிப்பதற்கான போர். அதன்பிறகு காம்பில்யத்தின் கோட்டை

அத்துடன் வண்ணக்கடலில் வரும் விதவிதமான கோட்டைகள். அவற்றில் அசுரர்களின் கோட்டைபோல அற்புதமானது ஒன்றும் இல்லை.

வெண்முரசுஎன்னென்ன சித்திரங்களை எல்லாம் அளிக்கிறது என்று வியக்கிறேன்

ஜெயராமன்