Tuesday, October 20, 2015

மழைநாக்கு

“இளவரசே, மழை என்பது கடல் தன் கை நீட்டி அதன் குழந்தையாகிய மண்ணை வருடுவதல்லவா?” என்று மாலினி சொன்னாள். அவள் வியப்புறும்படி அதை அவன் சரியாக புரிந்து கொண்டான். அருகே வந்து “பசு நக்குவது போல” என்று நாவால் நக்கிக் காட்டினான் “இப்படி கன்றை பசு நக்குவது போல மழை நக்குகிறது”

ஆஹா என்ன ஒரு சிந்தனை! என்ன ஒரு உவமை!   இனி மழையைக் காணும் போதெல்லாம் அன்னைப்பசுவின் நக்குதல்  அல்லவா நினைவுக்கு வரும்.   இன்றைய இளம் வயதினர் எத்தனை பேர் தாய்ப் பசு தன் கன்றை நக்கிவிடுவதைப்ப் பார்த்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. அதில் தெரியும் அந்தப் பசுவின் தாய்மை அன்பு, அதன் பாசம், எனது கன்று என்ற பெருமிதம், எனக்கொரு வாரிசு என்ற ஆனந்தம்.   குளிர்விக்கப்பட்ட ஈர நிலம்   நக்கப்பட்ட கன்றின் உடல் ரோமம் போல மழை நீர் ஓடிய நிலம் இருக்கும்.  இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத உவமைகளில் ஒன்றாக விளங்கும். 

தண்டபாணி துரைவேல்