ஃபால்குனையின் பேரழகும் அவள் பாடலும் நடனங்களும் அவளின் ஒவ்வொரு அசைவும் 
நம்மை ஈர்க்கின்ற பொழுதில் அவளின் வில்லாற்றலை போர்த்திறத்தை 
வெளிப்படுத்தும் போர்.மணிப்புரியில் மரங்களில் மறைந்து அம்புகளால் நாகர்களை
 அவள் தனத்து வெல்லும் போர் ஒரு சிறந்த மாயாஜால வண்ணம்..   அர்ச்சுனன்  
பெண்ணாகவும் ,சித்ராங்கதன் ஆணாகவும் உருக்கொண்டாலும் இருவரின் 
உள்ளுணர்வுகளும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கின்றன.மணிப்புரியின் லோக்தத் 
தடாகத்தின் மிதக்கும் தீவுகளில் இருவரும் போர்க்கலை பற்றி பேசும் இடம் 
நுட்பமானது.சுற்றிலும் மிதக்கும் தீவுகளும்,அவற்றின் அலையும் வேர்களும், 
மூங்கில் அரண்மனைகளும் கனவுலகை உண்டாக்குகின்றன.ஏரி நீரில் பொன்னொளிர் 
சூரிய ஒளியும் பறவைகளும் ஜெயமோகனின் எழுத்தில் நம்மை மூழ்க 
வைக்கின்றன.உளமார்ந்த வாசிப்பனுபவம்.நிலையற்று அலைபவனின் பயணம்.
மோனிகா மாறனின் பதிவு காண்டிபம் பற்றி
மோனிகா மாறனின் பதிவு காண்டிபம் பற்றி
