Wednesday, October 7, 2015

கணங்களின் மாலை



வாழ்க்கை என்பது என்ன? உண்டு உடுத்து புணர்ந்து, சொல்லி, கேட்டு, களித்து கலங்கி துயின்று விழித்து இறந்துப்போதல்தானா? இதுவும் வாழ்க்கைதான், ஆனால் இதற்கும் ஒருபடி மேல் செல்லும் வாழ்க்கை துணையாதல் என்கிறான் வள்ளுவன். துணையாதல் மூலம் நடத்தப்படும் இல்லறம், அறங்கள் அனைதிலும் நல்லறம் என்று அன்னை ஓளவையால் வியக்கப்படுகிறது. துணையாதல் என்பது மானிடருக்கு மட்டும் உரியப்பண்பு அல்ல, உயிர்களின் பண்பு. மானிடர்கள் இடம் சட்டத்திட்டம் வரையால் மேன்பட்டு இருக்கிறது. 

துணையை அடைவதன் மூலமே வாழ்க்கை உச்சம் பெற்றுவிடுகிறதா? துணை வந்தபின்புதான் யாருக்கும் யாரும் துணை இல்லை என்பதும் தெரிகிறது. வாழ்க்கைதான் எத்தனை சிக்கலைக்கொண்டு உள்ளது. ஆனால் எந்த சிக்கலும் இல்லாததுபோல்தான் வாழ்க்கை உள்ளது. பெரும் ஆழத்திற்குள் இறங்காமல் மேலே நின்றுப்பார்த்து வாழ்க்கை என்ன என்று ஒரு கேள்விக்கேட்டால் அந்த கணத்தில் நிற்றல் என்று வெண்முரசு சொல்கிறது. அந்த கணத்தில் நிற்கும்போது கடந்துச்செல்கின்றோமா? வழுக்கிவிழுகின்றோமா? என்பதுதான் வாழ்க்கையின் விளைவு. விளைவாகி நிற்கும் வாழ்க்கை.

மணிபுரிநாட்டின் மக்களின் இந்த கணத்தை எண்ணிப்பார்க்கிறேன். வெற்றியில், இசையில், நடனத்தில், காதல் கதையில், உணவில், மதுவில், களிப்பில் வந்து நிற்கிறார்கள். அதன் முன் கணம், கண்ணீரில், ’குருதியில், அச்சத்தில், உயிர்வதையில் நின்றவர்கள் அவர்கள். இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வாழ்க்கை கணம். நாடு இப்படித்தான் அந்த அந்த கணத்தை தாண்டிச்செல்கிறது.  

தனி மனிதனின் கணம் அர்த்தங்கள் நிறம்பியதாகா? அடுத்தகணத்தை வடிப்பதாக, படிப்பினையாக இருக்கிறது. சித்ராங்கதன் அடிப்பட்டு குருதிவடியக்கிடக்கிறான், அவனுக்கு ஃபால்குணை மருத்துவம் பார்க்க செல்கிறாள்.அடிப்பட்டு கிடப்பது ஆண், மருத்துவம் பாாக்கச்செல்வது பெண். கண்ணுக்கு தெரியும் காரணத்தைக்கொண்டுப்பார்த்தாலும் இதுதான் பிரச்சனை, கண்ணுக்கு தெரியாத காரணத்தைக் கொண்டுப் பார்த்தாலும் இதுதான் பிச்சனை. சித்ராங்கதன் இடம் சிறுநீர் கேட்கவேண்டும் என்று ஃபால்குணை நினைத்திருக்க வாய்ப்பில்லை அதை சித்தாங்கதன் புண் உருவாக்குகிறது. மருத்துவச்சியாய் ஃபால்குணை அந்த கணத்தை தாண்ட முடியும், சித்ராங்கதனுக்குதான் அந்த கணம் வாழ்க்கையின் கணமாக வந்து நின்று கனக்கிறது. இந்த கணத்தை கடப்பதா? இ்ந்த கணத்தில் சறுக்குவதா? வாழ்க்கை உருவாக்கும் இந்த கணங்கள்தான் வாழ்க்கையை பருப்பொருளாக நம்மால் சுமக்கமுடியாத மலைகளாக ஆக்கிவிடுகின்றது. கண்ண்ணுக்கு’ தெரியாத அருவமான வாழ்க்கை அந்த கணத்தில் நின்று உருவம் பெருவதுதான் வாழ்க்கையின் சூட்சுமம், சுகமும் சித்திரவதையும். இந்த மூன்றையும் ஒவ்வொரு கணத்திலும் அனுபவிப்பதைத்தான் வாழ்க்கை என்கிறோம். அதுதான் எத்தனை எத்தனை வகையில் இங்கு உள்ளது. எத்தனை உயிர்களோ அத்தனை கணங்களின் பண்முகபிணைப்பு வாழ்க்கை. இருப்பது உயிரும் கணமும் என்ற  இரண்டு, கலந்து வெளிவருவது எண்ணில்லா வாழ்க்கை. ஒரே மாவை ஓராயிரம் பிஸ்கட்டாய் சுட்டுக்குவிப்பதுபோல வாழ்க்கை. 

சிறுநீரா?” என்று மீண்டும் சித்ராங்கதன் கேட்டான். “ஆம்” என்றாள் ஃபால்குனை. “இங்கா?” என்றான். “இங்கு எவரும் இல்லைவெளியேயிருந்து மருத்துவர் எவரையும் அழைக்க நேரமில்லை” என்றாள்அவன் ிழிகளைத் தாழ்த்தியபோது மென்மையான வெண்கழுத்தில் நீலநரம்பு ஒன்று எழுந்ததுவெண்பளிங்கு சாளக்கிராமத்தில் விழுந்த நீரோட்டம் போலஉதடுகளைக் கடித்துக்கொண்டு சிவந்த விழிகளுடன் அவளை நோக்கி “நீ விலகி சுவர் நோக்கி நில்அந்தக் கொப்பரையை என்னிடம் கொடு” என்றான்-காண்டீபம்-22.


இ்ந்த கணத்தில் இருக்கும் உடலில் உள்ளத்தில் சூழ்நிலையில், காலவெளியில் நம்மை சிக்கவைத்து நம்மை சுற்றிச்சுற்றி கொண்டாம்கொட்டுவதுதான் வாழ்க்கையின் சாகசம். வாழ்க்கை அருவமாய் இருந்து உருவம் பெறுவது இந்த கணத்தில்தான். சித்ராங்கதன் கழுத்தில் நீலநரம்போடுவதைப்பார்க்கிறேன். ஃபால்குணை சிறுநீர் என்று சொல்லும் சொல்லே சித்ராங்கன் உடம்பில் ஒரு நாகதீண்டலை உண்டாக்கி நீலவிடம் ஏறவைக்கிறது.  வாளால் குத்தி விழும் கணத்தில் நாகமும் கடித்தால் அது வாழ்க்கை. வாளால் கிழித்து, நாகவிசமேறி துடித்து கிடக்கையில் புண்ணில் முள்ளால் குத்தி, உப்புநீரால் கழுவி அலறவைக்கும் கணம் வாழ்க்கை.

இந்த கணத்தில் சிக்கிக்கொள்ளும் அகம் ஒன்று என்னச்சொல்லும்?

துப்பார் அப்பு ஆடற்தீ மொய்க்கால்
     சொற்பா வெளி முக்குணமோகம்
துற்றாயப் பீறற்தோலிட்டே
     சுற்றா மதனப் பிணிதோ’யும்
இப்பாவக் காயத்து ஆசைப்பாடு
     எற்றே உலகிற் பிறவாதே
எத்தார் வித்தாரத்து கிட்டா
     எட்டா அருளைத் தரவேணும். (முருகா) என்று திருப்புகழ் பாடும்.

வாழ்க்கையை விட, உடம்பை விடவேண்டும், உடம்பைவிட பிறவியை விடவேண்டும் என்று கண்டுக்கொண்ட அகம் அது.

வாழ்க்கையின் அதி கனமான கணத்தில் நிற்கும் சித்ராங்கதன்போன்ற உடல்கள் அந்த கணத்திலும் வாழ்வை விழைவது,  உடல்பெற்றதின் சிறப்பை உணர்வது அசரடிக்கிறது. உடம்பெடுத்து வாழ்வதின் சுவை அந்த கணத்தில் வந்து விழுந்து இன்னும் இன்னும் என்று இந்த வாழ்க்கையை இந்த உலகத்தை கொண்டாட வைக்கிறது.காதலை உருவாக்குகிறது, வாழ்க்கையின் சுவையை கூட்டுகிறது. இந்த கணத்தை கொண்டாட செய்கின்றது. இந்த கணத்தை இன்னும் இன்னும் என நீட்டிச்செல்ல செய்கிறது.  இப்படி கணங்களின் மாலை தொடுக்கப்படுகிறது. கணங்களின் மாலையை வாழ்க்கை என்று  புனைந்து வாழ்ந்தேன் என்கிறது. இந்த உடலும் உள்ளமும்.  
மீண்டும் அவள் விழிதிருப்பியபோதும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான்இருவிழிகளும் உலோக ஒலியெழுப்பி அம்பு முனைகள் தொடுவதுபோல சந்தித்து விலகினஇரு மணிகள் ீரலைகளில் அணுகவா விலகவா என அலைக்கழிந்தன.-காண்டீபம்.-22.

இத்தனைவலியில், கொடுமையில் சித்ராங்கதன் விழிவிளையாடும் விளையாட்டை கண்டு திகைக்கிறேன். அது சித்ராங்கதன் விழிமட்டும் இல்லை, மண்ணில் வாழும் ஒவ்வொரு உள்ளத்தின் விழி. வாழ்க்கையின் அந்த கணத்தில் எத்தனை துன்பம் இருந்தால் என்ன? ஒருதுளி இன்பம் இருக்கும் இடத்தை அகம் அடைந்து அதன்மூலமே மொத்த வாழ்க்கை வலியையும் கடந்துப்போகின்றது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.