Monday, October 5, 2015

முகம்

அன்புள்ள துரைவேல்,
ஆனால், சாக்ஷுஷி மந்திரம் கற்ற அர்ஜுனன் பார்க்கும்போது நான் என்ன செய்ய? 


//இரு கன்னங்கள் மேலும் மாதுளை முத்துக்கள்போல் பருக்கள் எழுந்திருந்தன//

//இன்னும் மீசை முளைக்கவில்லை. குரலில் ஆண்மை கூடவில்லை. விழிகளும் கன்னியருக்குரியவைபோல் கனவு நிறைந்துள்ளன” என்றாள் ஃபால்குனை. “ஆம்” என்றான் கலிகன்.//

வதந்திகள் உண்மையாக பரவும் நாட்டில்தான், உண்மைகளும் வதந்திகளாய் நடக்கிறது. 
//முதலில் இங்கு ஒரு சிறிய வதந்தி இருந்தது. இம்முறை அரசி பெற்றதும் பெண்ணே என்று. ஆனால் அது நாகர்கள் பரப்பிய வீண்செய்தியே என்று தெளிவாயிற்று. சில ஆண்டுகளிலேயே கையில் நாண் முழங்கும் வில்லும் ஒளிரும் வாளும் ஏந்தி இளவரசர் பொதுமேடையில் எழுந்தார்.// 

ஆனாலும் நான் அவசரப்பட்டுவிட்டேனோ என்று நினைக்கிறேன் துரைவேல். நாளைவரை அமைதிக்காத்து இருக்கலாம். 
___________________________________


துரோணரை வெல்ல எனக்கு மகன்வேண்டும் என்று வஞ்சம்கொள்ளும் துருபதன் நடத்தும் புத்திரகாமேஷ்டியாகத்தில் திருஷ்டத்துயுமனன் பிறந்தாலும்,  ஏனோ அன்னை பாஞ்சாலியும் வந்து பிறந்துவிடுகிறாள். நம்ம அர்ஜுனனுக்காக

மணிபூர நாடும் சக்திப்பீடம், அன்னைபூமி, மணிபூரகசக்கரநாடு, இங்கும் அரசன் மகன் வேண்டும் என்றுதான் தவம் இருக்கிறான். அன்னை விடுவாளா? சிற்றாடைக்கட்டி சிறுமியென வந்த அன்னை மணிபத்மை சிறுமலரைத்தானே வரம் அளிக்கிறாள். இங்கு பிறக்கும் இந்த சின்னவண்டும் அர்ஜுனனுக்காகத்தான் பிறக்கிறாள். 

அர்ஜுனா நீர் யாரப்பா? கண்ணனின் நண்பன் என்பதாலேயே நீ அவ்வளவு பெரிய ஆளா? நீ அவ்வளவு பெரிய ஆளாக இருப்பதால் கண்ணனி்ன் நண்பன் ஆனாயா? 

சித்ராங்கதனுக்கு ஆடைக்கட்டி அலங்காரம்செய்து வாளும் வில்லும் கொடுத்த  ஜெதான் அவனின் அனைத்து ஆடையையும், அலங்காரத்தையும் கழட்டுகின்றார். வேடிக்கைப்பார்த்த    எனக்கா சிறை, நல்ல இருக்கே ஞாயம். ..))).

சித்ராங்கதனுக்கு அலங்காரம் செய்யும்போது அன்னைபோல் பார்த்து பார்த்து அலங்கரிக்கும் ஜெ. அலங்காரத்தை கலைக்கும்போது மேஜிக்காரன்மாதரி எப்பபோது கலைத்தேன் என்பதே தெரியாமல கலைப்பதுதான் அழகு. 
------------------------------------------
முன்குறிப்பாய் சொல்லவேண்டிய பின்குறிப்பு -இந்த அத்தியாயம் படிக்கும்போது அன்னை மீனாட்சியின் தரிசனம்தான் நடந்தது. 

பாண்டியநாட்டை ஆள  தனக்கு ஒரு மகன்வேண்டும் என்று புத்திரகாமேஷ்டியாகம் செய்கிறான் மலையத்துவஜன். மதுரையும் சக்திபீடம், மகன் பிறக்கவில்லை, மகள் பிறக்கிறாள். அன்னை மீனாட்சியே தடாதகைப்பிராட்டியாகப்பிறந்து சரித்திரத்தை புரட்டுகின்றாள்.  சித்ராங்கதனைக்கண்டு கலிகன் அஞ்சுவதுபோல்,  அன்னையை ஆண் என்றே உலகம் அஞ்சுகிறது. நிலாசூடி வெள்ளேறு   ஏறும் அந்த கயிலை மலைமகன் மட்டும் அவள் கண்ணில், கன்னத்தில், நெஞ்சத்தில் கண்வைக்கிறான்.  அவன் தன்னை மதனை வென்றவன் என்கிறான். இவன் (அர்ஜுனன்)  தன்னை  பெண் என்கிறான். சக்தியை மணம்முடிக்க எத்தனை பெரிய தவம் செய்யவேண்டி இருக்கு. 

பெண் பிறந்ததாய் நினைக்காதீர்கள்.  அவள் மீனாட்சியாய், மணிபத்மையாய் இருக்கலாம். 
 
ராமராஜன் மாணிக்கவேல்