Friday, October 23, 2015

நெளிவு

அன்புள்ள ஜெயமோகன்

நீண்டநாட்களாக ஒன்றுமே எழுதவில்லை. நடுவே வெண்முரசு வாசிப்பதும் விட்டுப்போயிற்று. வீட்டில் சில துக்கங்கள். எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்தேன். இப்போதுதான் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறேன். தொட்டுவிட்டேன். வாசகர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள். எழுதுவதுதான் எந்த வகையிலும் துண்டாகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது

அர்ஜுனனின் பயணத்தை ஒரு சாகசக்கதையாகவே கேட்டிருக்கிறொம். அதை இப்படி ஒரு ஆன்மிகச் சாகசமாக பார்ப்பது ப்ரமிப்பை அளிக்கிறது. இப்படி மேற்கு நாட்டுக் காவியங்களிலேயே உண்டு. வீரன் என்பவன் அக உலகத்தை ஜெயித்து வரவேண்டும் என்பார்கள்.

அர்ஜுனன் உலூபியை நோக்கிச் செல்லும் இடம் ஆழத்தின் ஒரு தரிசனம். அங்கே ஒரு நெளிவு. மேலே வந்து சித்ராங்கதையை நோக்கிச்செல்வது இன்னொரு தரிசனம். அது இன்னொரு நெளிவு

தியானத்திலே இந்த நெளிவுக்கு பெரிய இடமுண்டு. ஒவ்வொன்றும் நெளிந்துகொண்டே இருக்கும் உலகம்தான் ஆழம் என்பது

சுவாமி