Tuesday, October 20, 2015

முலைக்கண்

தேரோட்டி. 1

இனிய ஜெயம்,

சமீபத்தில் எனது தோழி ஒருவர், தனக்கு இணை தேடிக் கொண்டிருந்தார்.  '' கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா? நம்பவே முடியல''   என்றேன்.

அவர் தோள்களை குலுக்கியபடியே , ''யா இன்னய காலம் என்ன மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் சிரமம். சீக்கிரம் தாண்டிடலாம். எனக்கு ஆணோ, செக்சோ டசின் மேட்டர். ஆன எனக்கு வத வதன்னு நிறைய குழந்தை பெத்துக்கணும்.உண்மையில் எல்லா பொண்ணுகளும் உள்ளுக்குள்ள என்ன மாதிரிதான். வாட் டு டூ நான் கல்யாணம் பண்ணிக்கலைன்னா உங்க 'புனிதமான' சமுதாயத்த கேடுத்துடுவனே பரவா இலையா''என்றுவிட்டு சிரித்தார்.

இன்றைய அத்யாயம் மாலினி வழியே இந்த சாரத்தை தொட்டு மீட்டியது. என் வாழ்வில் இனி எந்த ஆணுக்கும் இடமில்லை என்றவள் அவள். அவளால் ஆண் இன்றி உடல் சேர்கை இன்றி வாழ்ந்துவிட முடியும். ஆனால் அவளால் மதலை இதழ்களுக்கு கனிந்து முலையூட்டாமல் நிறைந்து விட முடியாது. தேக சங்கமம்  இன்றி அவள் இழப்பது எதுவும் இல்லை. ஆனால் மகவின்றி பெண் தனது ஆத்மீக நிறைவை இழக்கிறாள்.

அர்ஜுனனுக்கு  பல் முளைத்த காலம் அரண்மனையில் அவன் பற்கள் கடித்துப் பார்க்காத முலைக்காம்புகளே இல்லை. அர்ஜுனனுக்கு கூட அளிக்காத ஒன்றினை இன்று  மாலினி சுஜயனுக்கு அளிக்கிறாள். 

வாசகன் மனதால் உணர முடியும் அவளது முலைக்கண் ஏந்திய  ஈரத்தின் குளுமையை
 
கடலூர் சீனு