இனிய ஜெயம்,
மீண்டும் பின்னோட்டி வாசித்தேன். சித்ராங்கதனை அவன் அணிந்திருக்கும் கவசமே, ஒவ்வொரு கணமும் அவனை '' தான்'' ''தான்'' என்று உணரவைக்கிறது. அந்த தான் எனும் மூர்க்கத்தை தக்கவைக்கும் கவசத்தை முதலில் குரு அகற்றுகிறார்.
முன்பு போர் வாயிலில் நின்று நீலன் சொல்கிறான் '' நான் கவசம் அணிவதை விரும்புவதில்லை''.
ஆச்சர்யம் இத்தனை பெரிய நாவல் வரிசையில் எப்படி இந்தகையதொரு இன்டர்லின்க் எல்லாம் உருவாகிறது.?
அனைத்துக்கும் மேல் நாவலில் நிகழும் ஒவ்வொன்றையும் என் அகம் ஏன் நீலனோடு சென்றே பிணைத்துப் பார்க்கிறது?
ஆச்சர்யங்களை ஆச்சர்யங்கலாகவே விட்டு விடுகிறேன். அது அவ்வாறு இருப்பதே அழகு.
கடலூர் சீனு