Monday, January 11, 2016

போர்மாதம்



திரு ஜெயமோகன்

மஹாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் தான் நடந்தது என்று ஒரு குறீப்பு இன்று நூலகத்தில் பார்த்தேன். அப்படியா? கூடவே கோவர்த்தன மலையை குடை பிடித்து ஆயர்பாடி மக்களை கண்ணன் காத்ததும் இதே மாதத்தில் தான் என்றும் இருந்தது. இது வரை நான் இது குறித்து கேள்விப் பட்டது இல்லை. நேரம் இருந்தால் தெரிவியுங்கள்
 
அன்புடன்
லோகமாதேவி
 
அன்புள்ள லோகமாதேவி
 
தென்னகத்துப் பதிப்புகளில் மார்கழி மாதத்தில் அந்தப்போர் நடந்ததாக உள்ளது. மகாபாரதத்தில் அவ்வாறு தெளிவாகச் சொல்லப்படவில்லை. 

மழைக்காலம் என்பது வடக்குக்கு ஜூன்மாதமே. ஆகவே கோவர்த்தனகிரியை பிடித்தமாதமாக அங்கே ஜூன் மாதத்தை கொண்டாடுகிறார்கள்.நாம் டிசம்பரை
 
இதெல்லாம் புராணங்கள் , நேர்வரலாறுகள் அல்ல.
 
ஜெ