Tuesday, March 3, 2015

ஜொக்காஸ்டா



வல்லமையோடு இருக்கும் ஆணை பார்க்கும் போது பெண் உள்ளம் கவரப்படுகிறது. அந்த ஆண் மகனாகி விடும் போது அங்கு உறவு சாத்தியமாக இல்லை. இருப்பினும் மனதில் ஏற்படும் ஈர்ப்பு அப்படியே தான் நீடிக்கிறது. அது மிக அந்தரங்மானது. குந்திக்கும் அர்ஜுனனுக்கும் மட்டுமே இது தெரிகிறது. அதே போல் சத்யவதியின் alter ego போல் வரும் அந்த அணுக்க சேடிக்கு தெரிந்திருக்கிறது.

பெண்ணில் இருக்கும் மூண்று தேவதைகளில் கருவரைக்கான தேவதை (?) வல்லமையான, தன் கணவை நினைவாக்கும் ஒரு ஆண் மகனை பார்க்கும் போது விழித்து கொள்கிறது. அவனை தான் அடைய முடியவில்லை என்றாலும் அதன் நோக்கம் அவன் மூலம் தன் வம்சம் விருத்தி அடைய வேண்டும் என்பதே. அதற்காக அவனுக்கு அழகிய ஒரு பெண்ணை தேடி அவளே தருகிறாள். அர்ஜுனனுக்கு திரௌபதி. திரௌபதியை வெல்ல அர்ஜுனனால் தான் முடியும் என்பதும் குந்திக்கு நன்றாக தெரியும். பாரத வர்ஷத்தின் பேரரசியாக அவளை ஆக்க போகிறவன் அர்ஜுனன் என்பதும் அவளுக்க தெரியும். சத்யவதியும் இது போன்ற கணவுடன் இருந்தவள் தான்.

இப்படியான தாய் மகன் உறவை உளவியலில் Jocasta complex என்கிறார்கள். ஜொக்காஸ்டா என்பவள் கிரேக்க தொண்ம கதாப்பாத்திரம். தன் மகன் என்று தெரியாமலே தன் மகனை மனக்க நேரிடுகிறது காதலுடன். பின் மகன் என்று தெரிந்தவுடன் தற்கொலை செய்து கொள்கிறாள். ஏழாம் உலகத்தின் இறுதி பகுதியை ஞாபகப்படுத்தியது.

ஹரீஷ்