வெண்முகில் நகரத்தில் தருமன், விதுரர், திரௌபதி உரையாடும் காட்சியில் சாளர திரை படபடப்பதும், கயிறு முறுகுவதும் அந்த காட்சியின் இறுக்கத்தை மற்றும் பரபரப்பை குறிப்பதாக உணர்ந்தேன்.அப்போது இந்த காட்சி சாதாரன பேச்சாக இருக்காது என்று தோன்றியது. சிறிது நேரத்தில் விதுரர் தருமனை நோக்கி கத்தினார். பொதுவாக இது போன்ற விவரனைகள் எல்லாம் பாத்திரங்களின் மன நிலைகளை பிரதிபலிப்பதற்க்காக எழுதப்படுகிறது போலிருக்கிறது.
ஹரீஷ்
குழுமவிவாதத்தில்