ஜெ
பூரிசிரவஸின் குணச்சித்திரம் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி வருகிறது. அவன் காற்றுபோல இருக்கிறான். எல்லா இடங்களிலும் படிகிறான். எல்லா பெண்களையும் விரும்புகிறான். அவனுக்கென்று ஒரு நிலையோ இலட்சியமோ இருப்பதாகத் தெரியவில்லை. அடலசண்ட் இளைஞனாக ஏராளமான கனவுகளை கொண்டிருக்கிறான். அந்தக்கனவுகள் எத்தனை நாள் நீடிக்கும் என்பதையே அவன் உணர்ந்திருக்கவில்லை. அவனுடைய அந்த அலைபாய்தலைத்தான் இந்த நாள் வரை கதை சொல்லிக்கொண்டிருக்கிறது
மிகவலுவான நிலையான பர்சனாலிட்டி கொண்ட பலர் நடுவே அவன் இப்படி அலைபாய்ந்துகொண்டிருப்பதே ஒரு வசீகரமான மனநிலையை உருவாக்குகிறது. அவனை வாசிப்பதை மிகவும் இன்பமான ஒரு அனுபவமாக ஆக்கிவிடுகிறது. அவன் முழுக்கமுழுக்க ஹ்யூமன் ஆக இருக்கிறான். எந்த அசாதாரணத்தன்மையும் இல்லை. எதற்கும் குறியீடும் இல்லை. இந்த எளிமையை நீங்கள் அடைந்திருப்பது பிற கதாபாத்திரங்கள் பிரம்மாண்டமாக இருக்கும் சூழலில் அற்புதமாக இருக்கிறது
சிவம்