Monday, October 15, 2018

போரின் நெறி-2



ஜெ


சுதசோமனும் துருமசேனனும் போரிட்டதையும் பீமனும் துரியோதனனும் போரிட்டதையும் ஒப்பிட்டு என்ன வேறுபாடு என்று ஒருவர் எழுதியிருந்தார். போர் அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதில் கொல்வதும் சாவது பிழையும் அல்ல. ஆனால் அதை ஒரு வரையறைசெய்யப்பட்ட விளையாட்டாகவே அன்றைக்கு நினைத்தார்கள். போரில் சாவதும் அந்த விளையாட்டின் ஒரு பகுதிதான் என்பதே அவர்களின் மனநிலையாக இருந்திருக்கிறது.

பீமனும் துரியோதனனும் அந்த பெர்ஃபெக்ட் ஆன விளையாட்டைத்தான் ஆடுகிறார்கள். ஆனால் மெல்லமெல்ல அதில் வஞ்சம் கலந்துவிடுகிறது. அப்ப்போது அது வேறு ஒன்றாக மாறிவிடுகிறது. அதை அந்த அத்தியாயம் இப்படிச் சொல்கிறது

நோக்க நோக்க அதன் முழுமைகூடிய அசைவுகளுக்குள் இருந்த வஞ்சத்தையும் சினத்தையும் உணரமுடிந்தது. அத்தனை அமிழ்ந்தமையால் அத்தனை அழுந்தியமையால், அத்தனை எரிகொண்டமையால் வைரமென்றாகிவிட்டவை அவை. அனைத்து அணுக்களும் கூர்கொண்டு எழுந்தவை.

அந்த உணர்வுகளைத்தான் சுதசோமன் வெறுக்கிறான். அதன் வெளிப்பாடாகவே பீமன் சகோதரர்களின் ரத்தத்தால் குளிக்கிறான். அதுதான் சுதசோமனின் மனதை கசப்படையவைக்கிறது

மகாதேவன்