Thursday, October 11, 2018

தந்தையும் மைந்தரும்




அன்புள்ள ஜெ,

இன்றைய அத்தியாயம் மிக அற்புதமாக அமைந்திருந்தது.  இது அரிதாகவே நிகழக்கூடிய வாசிப்பனுபவம். தெய்வங்கள் வானிலிருந்து இறங்கி வந்து விளையாடத்தொடங்கினால் மாந்தர், பாவம், என்ன செய்வர் என்ற துன்பியல் முழுமை கைகூடியதாக உணர்ந்தேன்.

சுதசோமன் தன் தந்தையை பால்ஹிகர் கொல்ல வேண்டும், தன் தந்தை பீமன் தன்னை கொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது தன்னையறியாமலேயே முடிவின்மைக்குள் ஒரு கணம் எட்டிப்பார்க்கிறான். தந்தைநிறைகள் தலைமுறைக்கு தலைமுறை தங்கள் மூதாதயருக்கு ஆகுதியாவதைத்தான் பார்த்துவிட்டான் என்று புரிந்தகணம் பதைத்துவிட்டது. பால்கிகரின் கதை பிழைவில்லாமல் சுழன்றதும் இந்த உணர்வை தீவிரப்படுத்தியது. இந்த உணர்வின் முழுமை பால்ஹிகரும் பீஷ்மரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்வது. 

திசைதேர்வெள்ளம் தொடங்கியபோது அம்பை தோன்றியது மெக்பெத் நாடகம் மூன்று சூனியக்காரிகளின் கூற்றுடன் தொடங்கும் உணர்வுத்தளத்தை நினைவூற்றியது. துன்பியலின் அழகியல் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தாலும் இங்கு அதைத்தூண்டுவது தந்தைமகனுறவு. இது  இந்தியர்களின் பிரத்யேக மனச்சிக்கல் என்று முன்பு நீங்கள் எழுதியது நினைவுக்கு வருகிறது.

நன்றி,
சுசித்ரா