அன்புள்ள ஜெ
பூரிசிரவஸின் வெறி
ஏன் என்று நான் வெண்முரசின் அத்தியாயங்களை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அவன் போர்க்களத்தில்
அம்புகளுக்குப் பயந்து கொண்டு ஒளிந்திருக்கிறான். அப்போதே அம்பு எடுத்துக் கழுத்தை
கிழித்துக்கொள்ளவேண்டும் என வெறி ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சிறுமையை தான் அடைந்தவனுக்குத்தான்
அப்படி ஒரு வெறி வரும். ஆகவேதான் அவன் சாத்யகியின் மகன்களைக் கொல்கிறான். அதிலும் ஈவிரக்கம்
இல்லாமல் கொல்கிறான். பெரிய கொலைகாரர்கள் தற்கொலைசெய்கிறார்கள். தற்கொலையும் கொலையும்
இணைந்தே உள்ளன. பூரிசிரவஸ் செய்தது ஒரு தற்கொலைதான். அவன் தன்னுடைய மனசாட்சியைத்தான்
அழித்துக்கொள்கிறான்
மனோகர்