ஜெ
கவசத்தை எடுத்து
ஜெயத்ரதன் காட்டுவதும் சாத்யகி மயங்கிவிழுவதும் உச்சகட்டங்கள். அதை வாசித்துச்சென்றபோதுதான்
அந்தக் கவசம் சினியுடையது என்பது ஞாபகம் வந்தது. அவனுக்கு அது பொருந்தவேயில்லை. அவன்
அதைத்தான் இழுத்துக்கொண்டே இருந்தான். அவனைக் கொன்றதே அந்தக் கவசம்தான். அந்தக்கவசம்
களத்தில் அப்படிக் கிடப்பதிலுள்ள பரிதாபம் மனதை அறுப்பதுபோலிருந்தது
ஜெயராமன்