Sunday, October 14, 2018

சுபகமும் கம்ரனும்




ஜெ

உங்கள் கதைகளில் நீங்களே பெயரிட்டிருக்கும்போது அந்தப் பெயர்களுக்கு என்ன பொருள் என்பதை பார்ப்பது என் வழக்கம். சுபகம் என்றால் அழகானது, நல்ல வடிவம் கொண்டது என்று பொருள். கம்ரன் என்றால் மின்னுபவன், ஒளிர்பவன் என்று பொருள். இரண்டுபெயர்களுக்கும் என்ன தொடர்பு என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். காட்டிலிருக்கும் இருள் நல்ல வடிவை எடுத்து உலகுக்குள் வந்ததுதான் யானை. மீண்டும் தேடியபோது இந்த வரி வந்தது. பொருள். அறியவொண்ணா இருள்குவையென நின்றிருக்கும் அது யானையென்று ஆகி சுபகம் என்று பெயர்சூடிவிட்டது. ஆகவே கம்ரன் என்ற பெயரும் இதேபோல அர்த்ததுடன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின்னி அணைபவன் என்ற அர்த்தம் என எடுத்துக்கொண்டேன்

சுவாமி