அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம் . ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28 இன்றைய வெண்முரசுவில்பிதாமகர் பீஷ்மரை வெல்வது எப்படி என பாண்டவர்கள் ,இளைய யாதவர் தலைமையில் யுத்த ஆலோசனைநடத்துகிறார்கள் .காம ஒறுப்பு நோன்பு கொண்ட நைஷ்டிக பிரம்மச்சாரியாய் நூற்றி முப்பது அகவை கடந்த பிதாமகர் தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அறங்களை முற்றிலும் கைவிட்டு ,கொடுவாள் ஏந்தியகொடூர கொலைதெய்வமாய் குருஷேத்திரத்தில் நிற்கிறார் .அவரை பாசமிகு தந்தையாய் ,பாசமிகுதாத்தாவாக பார்த்த பாண்டவர்களும் ,அவர் கொடி வழியினரும் ,பீஷ்மர் கடந்த மூன்று நாட்கள் போரிலேநூற்றுக்கும் மேற்பட்ட அரச இளமைந்தர்களை இரக்கமில்லாமல் கொன்று குவித்ததை ஜீரணிக்க முடியாமல்தவிக்கின்றனர். பீஷ்மர் தேர் செல்லும் இடமெல்லாம் காலனின் தடம் பதித்து செல்வதை காணும் தோறும்பாண்டவ படைகள் பெரும் அச்சத்தில் தவிக்கின்றன .
துரியோதனன் அரச சபையிலே கௌரவ சேனைகளின் தலைவரான பீஷ்மர் ,பாண்டவர்கள்ஐவரையும் குருஷேத்திர யுத்த களத்தில், நான் என் கைகளால் கொல்லமாட்டேன் என்று சொல்லுரைத்ததைகௌரவ படையினரும் ,பாண்டவ படையினரும் அறிந்த செய்தி தான் .ஆனால் பீஷ்மர் அத்தகைய கொல்லாநெறியை பாண்டவர் மைந்தர்களிடமும் பேணுவார் என்று எதிர்பார்த்தல் பிறழ் முரண் வாதங்கள் என்று பாண்டவர்கள் தெரிந்து கொண்டனர் .ஆம் மூன்றாம் நாள் போரில் அர்ஜுனன் மைந்தன் அபிமன்யூ ,கௌரவ அதிரதர்கள் பால்ஹிக இளவரசன் பூரிசிரவஸ் மற்றும் சிந்து தேச அரசன் ஜயத்ரதன் ஆகியோரை சமர் யுத்தத்தில் எதிர்கொள்ளும் வேளையில் ,யாரும் எதிர்பார்க்காத செயலை பீஷ்மர் செய்தார் .ஆம் அபிமன்யூ பின்புறமாக யுத்தத்தில் புகுந்து அம்புகளால் அபிமன்யூவை தாக்கினார்.. .வெண்முரசு’ -நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 25 .இருவர் பொருதும் களத்திற்கு சங்கொலியிலாமல் நுழைவதா பிதாமகரின் நெறி?” என்று திருஷ்டத்யும்னன் உரத்த குரலில் கூவினான்.அனைத்து நெறிகளையும் கடந்துவிட்டீர்கள், பிதாமகரே” என்று திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் குப்புற விழுந்தபடி கூவினான்.
ஆம் பீஷ்மரின் கொலை வெறியாட்டத்தை ஒரு யுக்தி கொண்டு தடுக்காவிட்டால் அடுத்த ஓரிரு நாளில் யுத்தம் முடிந்து விடும் என்பதை பாண்டவர்கள் தெள்ள தெளிவாக கண்டுகொண்டனர் பீஷ்மர் காட்டு தீ பசுமை செடிகளை அழிப்பது போல் பாண்டவ சேனைகளை தயவு தாட்சணியம் இன்றி நிர்மூலம் செய்து ,ருத்ர தாண்டவம் ஆடி ,சாம்பல் மட்டுமே எஞ்ச செய்திடுவார்..பீஷ்மரை வெல்வதற்கு பாண்டவ படையில் உள்ளவர் ஒருவர் தான் .அது அர்ஜுனன் தான் .ஆனால் பாண்டவ அர்ஜுனன் பிதாமகரின் முன் தானொரு மைந்தன் என்னும் எண்ணத்தை கைவிடாதொழிந்து நிற்கிறான்.மழையில் நனைந்த பட்டாசு என இந்த சங்கடமான சூழலை கடந்திட தான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று சூளுரைத்து போர்க்களம் புகுந்த இளைய யாதவர் ,ஒருகணம் நிலை தடுமாற மூன்றாம் நாள் போரில் , அவரின் படைக்கலமான படையாழி - சக்கராயுதத்தை எடுத்தது .ஆனாலும் படைக்கலத்தை ,ஆயுதம் நீக்கி ,கைகூப்பி நின்ற பீஷ்மர் மீது இளைய யாதவர் பிரயோகிக்கவில்லை .அதனை தான் பீஷ்மரின் சாவுக்காக காத்திருக்கும் சிகண்டி யுத்த ஆலோசனைக் கூட்டத்தில் விளக்குகிறார்.
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28 .உரத்த குரலில் சிகண்டி சொன்னார் “ஆனால் நேற்று களத்தில் இளைய யாதவர் காட்டியது ஒரு நற்குறி. தன் நோன்பையும் நெறியையும் எக்கணத்திலும் ஆடையென கழற்றி வீசிவிட சித்தமாக இருப்பதாக அறிவித்தார். அவையில் ஆடை களைவது சிறுமை, ஆனால் தீப்பற்றும் இல்லத்திலிருந்து எரியும் ஆடையுடன் தப்பி ஓடுபவன் அதை கிழித்தெறியாவிட்டால் அவன் அறிவிலி. நாம் ஒவ்வொருவரும் எரிந்துகொண்டு எண்ணி தயங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மில் எல்லை கடந்தவர் எவர்? சொல்க… எவரால் இயன்றது அது?” ஆம் .கொலை வெறி தாண்டவமாடும் பாதாள காளியென நிற்கும் பீஷ்மரை கொல்லுவதற்கு முதலில் அவரின் கௌரவ சேனை படைத்தலைவர் என்ற அடையாளத்தை பங்கம் செய்ய வேண்டும் .அவரின் பாதுகாப்பு எனும் அரணில் உள்ள கௌரவ நூற்றுவரில் ஒருவனை கூட பீமன் இன்றுவரை வதம் செய்யவில்லை .அந்த வதம் தொடங்க தான் சிகண்டி பீமனை வற்புறுத்துகிறார் .கௌரவர்கள் யுத்தகளத்தில் மாள்வதை பொறுக்காமல் கௌரவ முதல்வன் துரியோதனன் பீஷ்மரை சீண்ட சீண்ட அவரது ஆணவம் பங்கப்படும் .அத்தகைய ஆணவம் சிறுத்தவரை அர்ஜுனன் படைக்கலம் கொண்டு எதிர் கொள்வது எளிது என்கிறார்.
ஆம் சிகண்டி அறிந்த மற்றோரு உண்மையும் உண்டு .சிகண்டியாலும் தனிப்போரில் பீஷ்மரை வெல்ல இயலாது .ஆனால் சேற்றில் கால்கள் அமிழ்ந்த யானையை செந்நாய்கள் வேட்டையாடுவது எளிது .அர்ஜுனன் துணையுடன் பீஷ்மரை கொல்லும் களம் வரும் என்பதை சிகண்டி உணர்ந்தவன் .அதற்க்கு முதலில் பீஷ்மர் ஆசையுடன் கொஞ்சி குலாவிய கௌரவர் நூற்றுவரை கொன்றழிக்கும் செயலை தொடங்கி வைக்கிறான் .இது பீமனுக்கு - ஒரு அறமீறலுக்கான நினைவூட்டல் தான் .திரௌபதி துகில் உரிய நடந்த முயற்சியின் போது ,பீமன் செய்த வஞ்சின சபதம் தான் அது .சிகண்டியின் இந்த செயலை வண்ணத்து பூச்சி விளைவு என்று கூட சொல்லலாம் . The Butterfly Effect: This effect grants the power to cause a hurricane in China to a butterfly flapping its wings in New Mexico. It may take a very long time, but the connection is real. If the butterfly had not flapped its wings at just the right point in space/time, the hurricane would not have happened.
இந்தக் கோட்பாட்டை வேறு வடிவமாக 'கேயாஸ் தியரி' (Chaos theory) என்றும் சொல்வார்கள்இந்தக்கோட்பாட்டின் தந்தையான'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) 1963 இல், இதை இப்படிச் சொன்னார்,"பிரேசில்நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும்சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு ! உண்டு" " என்றார். இதை அவர்கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதனாலேயேஇந்தத் தத்துவம், 'வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது."வண்ணத்துப் பூச்சிக்கும்,சூறாவளிக்கும் சம்மந்தமா? நம்ப முடியாதது போல - சுத்தப் பைத்தியகாரத்தனமாக அல்லவா இருக்கிறது"என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மை.
ஆம் நாகர்கோவிலில் ,நாகராஜர் கோவில் உள்ள வடக்கு ரத வீதியில் உள்ள வேப்ப மரத்தில் ,ஒருபட்டாம் பூச்சி சிறகை படபடவென்று அசைப்பதற்கும் ,சென்னையை புரட்டி போடும் வல்லமை வாய்ந்தசூறாவளி புயலுக்கும் தொடர்பு உண்டு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது .காலமும் இடமும்தான் வேறு வேறு .இதனை சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழியுடன் ஒப்ப முடியாது . இதில் காலமும்இடமும் ஓன்று தான் .அதாவது மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று பெய்யும் சிறு மழை துளியால்ஒருவருடங்கள் கழித்து ஆந்திராவில் வெள்ளம் ஏற்படாது .ஆனால் 'வண்ணத்துப் பூச்சி விளைவு' சொல்வதுஅத்தகைய avalanche நிகழ்வை தான் .காலம் ,மற்றும் இடம் வேறானவை . கூரான நோக்கம் கொண்டபெருவிசையென பெருக்கம் கொள்கின்றன.
சிகண்டி பீமனை நோக்கி கௌரவ நூற்றுவரை தாக்கி அழி என்ற சொல் வண்ணத்து பூச்சியின்சிறகையசைப்பதற்கு ஒப்பானது .அது தான் பின்னொரு நாளில் ,ஆம் குருஷேத்ர யுத்தத்தில் சூறாவளியாக மாறி ,சிகண்டி மற்றும் அர்ஜுனனால் பத்தாவது நாளில் பிதாமகர் பீஷ்மர் வீழ்த்தப்படும் நிகழ்வுக்கு இட்டுசெல்ல போகிறது .குருஷேத்ர யுத்தத்தில் கௌரவரின் முற்றழிவிற்கு தொடக்கமும் அதுவே .அந்தசூறாவளியில் மூவர் மட்டுமே கௌரவர் தரப்பில் எஞ்சுவார்கள் .அது கிருபர் ,யாதவ கிருதவர்மன் மற்றும்அசுவத்தாமன் .இது தான் இளைய யாதவர் காட்டும் நெறி .
போனவாரம் இந்த வண்ணத்து பூச்சி விளைவை நான் எனது சிறப்பு வகுப்பு மாணவர்களிடம் - பத்தாவது படிக்கும் மாணவர்களிடம் சொல்லும் போது இவ்வாறு கூறினேன் .குருஷேத்திரத்தில்லட்சக்கணக்கான போர்வீரர்கள் மாண்ட நிகழ்வுக்கு ஆரம்ப புள்ளி - அடிப்படையாய் நிகழ்ந்தது - ஒருகன்றுடன் கூடிய பசு தானம் மறுக்கப்பட்டதே என்றேன் .என் மாணவர்கள் திகைத்தார்கள் . ஒரே ஒரு பசுதானத்திற்கும் பல லட்சம் வீரர்கள் சிந்திய குருதி, வெள்ளமாய் குருஷேத்திரத்தில் ஓடியதிற்கும் என்னதொடர்பு என்று ஆர்வத்துடன் கேட்டனர் .அவர்களுக்கு சுருக்கமாக வெண்முரசுவில் பிரயாகையில் துருபதன்துரோணரை அவமானம் செய்தது ,பதிலுக்கு துரோணர் தனது முதன்மை மாணாக்கன் அர்ஜுனன் மூலமாகதுரோணரை போரில் தோற்கடித்து தேர்க்காலில் கட்டியிழுத்து வரச்சொன்னது ,பின்பும் அவரிடம் உத்திரபாஞ்சாலத்தை அசுவத்தாமனுக்காக பிடுங்கி கொண்டது ,அதனால் வெகுண்ட துருபதன் அதர்வண வேதம்உரைத்த கொடும் யாகம் செய்து ,பாஞ்சாலியை பெற்றது என விவரித்தேன். இப்போது அதை போன்றதொருசெயலை தான் சிகண்டியின் வாதத்தில் காண்கிறேன் .
படைக்கலம் ஏந்தாத இளைய யாதவர் தான் குருஷேத்ர யுத்தத்தில் பாண்டவர்களின் முதன்மைபடைக்கலன் .அவர் பாண்டவர்களின் வெற்றிக்கு முதல் தடையாக உள்ள பிதாமகர் பீஷ்மர் களத்தில்வீழ்வதற்கு வழிகளை வகுத்து விட்டார் .இதன் விளைவை தான் திசை தேர் வெள்ளத்தில் தொடர்ந்து படிக்கபோகிறோம் .
நன்றி
ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்
THANKS AND REGARDS