அன்புள்ள ஆசிரியருக்கு,
சாத்யகியின் பார்வையில் அவனின் பிள்ளைப்பாசம் பற்றி கூறப்படவில்லையாயினும் இளைய யாதவரை நோக்கி அம்பின் முனை இருப்பது அவனின் ஆழ்மனதின் பாசக் கொந்தளிப்பை உணர்த்துவதாக உள்ளது.இளைஞனாக இருக்கையில் கிருஷ்ணன்மேல் பக்தி கொண்டு தொழும்பனாக இருக்கவும் ஒப்புக்கொண்டவன் தன் வாழ்வையே ஒப்பளித்தவன் ,தன் பத்து மைந்தர்களையும் காணிக்கையாக்க முடிவு செய்தவன் ,இதில் எதுவுமே கிருஷ்ணர் கேட்டதில்லை.ஆயினும் செய்தான்.ஆனால் பிள்ளைகள் களம்பட்டவுடன் தந்தையென உள்ளிருக்கும் உணர்வொன்று வஞ்சமென கிருஷ்ணர்மேல் எழுகிறது .இது எல்லாவற்றிற்கும் அவர்தான் காரணமென...அந்த தந்தையின் கரம்தான் திருப்புகிறது கிருஷ்ணரை நோக்கி அம்பை..
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தெய்வத்தையும் பெற்றோரையும் நிந்தனை செய்வது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது பெரும்பாலானோர்க்கு.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தெய்வத்தையும் பெற்றோரையும் நிந்தனை செய்வது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது பெரும்பாலானோர்க்கு.
கா.சிவா