அன்புள்ள ஜெ,
மன்னர்களின் மனநிலை
இந்நாவலில் ஆரம்பம் முதலே ஒன்றுபோலத்தான் இருக்கிறது. சுயநலம், சாதிய அடையாளம். இரண்டைத்தவிர
எந்த நினைப்பும் இல்லை. இந்தப்போரைப்பயன்படுத்தி தாழ்ந்த இனங்களின்மேல் ஆதிக்கத்தை
அடைந்துவிடலாமென்று அவர்கள் எண்ணினார்கள். அதற்கு இவ்வளவுபெரிய விலை கொடுக்கவேண்டுமா
என்று வரும்போது பின்னடைகிறார்கள். அவர்கள் கௌரவர்களுடன் நின்றதே எளிதாக ஜெயித்துவிடலாம்
என்பதற்காகத்தான். ஆகவே இப்போது குழம்புகிறார்கள். அவர்களின் குணச்சித்திரம் எப்போதுமே
ஒரே போல வீம்பும் படோடோபமும் கொண்டதாகவே வெண்முரசில் உள்ளது
ஆச்சரியமென்னவென்றால்
இங்கிலாந்து இந்தியாவை வென்றபோது அன்றைய கவர்னர்களும் பயணிகளும் அன்றிருந்த இந்திய
அரசர்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். இதே குணச்சித்திரத்தைத்தான் அவர்கள் மன்னர்களுக்கு
அளிக்கிறார்கள். முகலாயர் படையெடுப்பின்போதும் இவர்கள் இப்படித்தான் பூசலிட்டுக்கொண்டு
இருந்திருக்கிறார்கள்
எம். ராஜேந்திரன்