Tuesday, October 9, 2018

குண்டாசியின் மாற்றம்2


அன்புள்ள ஜெ

குண்டாசியின் மாற்றம் என்னிடம் எந்த ஆச்சரியத்தையும் உருவாக்கவில்லை. குண்டாசியும் மறுபக்கம் சிகண்டியும் சாவுச்சடங்குகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். இதை நம் குடும்பங்களிலேயே காணலாம். பெருங்குடிகாரர்களும் ஊதாரிகளும் குடும்பத்தில் ஒட்டாதவர்களுமாக இருப்பவர்கள்தான் சாவுச்சடங்குகளில் ஆர்வாமக ஈடுபடுவார்கள். மற்றவர்கள் மனம் தளர்ந்திருக்கும்போது இவர்கள் மட்டும் உற்சாகமாக இருப்பார்கள். இவர்களின் குணச்சித்திரம் அத்தகையது. அங்கேமட்டும்தான் அவர்களுக்கு முக்கியமான இடம் அமைகிறது. எல்லாரும் மரியாதையாக அழைத்துப்பேசுவார்கள். என் சித்தப்பா ஒருவரின் அதே குணாதிசயம். அவர் சாவுவீட்டில் சந்தோஷமாக இருப்பார். பொறுப்பாக வேலைசெய்வார். சத்தம்போட்டு எல்லாரையும் அதட்டுவார். அவரைத்தான் இங்கே பார்க்கிறேன்

ராம்