Wednesday, October 31, 2018

விழிநீர்



நான் விழிநீர்களுக்கு முன் அறிவிலாதோன்” என்றார் இளைய யாதவர். 


என்ற வரி இறுதிமுடிப்பாக வந்தது ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. நான் கோயில்களுக்குப்போகும்போதெல்லாம் பார்த்திருக்கிறேன். அத்தனைவகையான பாபங்களிலும் கிடந்து உழலும் கூட்டம் வந்து கைகூப்பி கண்ணீருடன் நின்றிருப்பார்கள். தெய்வங்களுக்குத்தெரியாதா? இது என்ன வேஷம் என்று நினைப்பேன். ஆனால் தெய்வங்கள் கண்ணீருக்குமுன்னால் அறிவில்லாத குழந்தைகள் என்ற புரிதல் ஒரு கணத்தில் இந்த வரியால் உருவானது. நாம் அறிந்த பெரியவர்களேகூட அப்படித்தான் இருக்கிறார்கள். நம் தாயும் தந்தையும் அப்படித்தானிருக்கிறார்கள். தெய்வமும் அப்படித்தானே இருக்கமுடியும்? கண்ணன் சொல்லும் அந்த வரி கீதைவரிபோல தோன்றியது.