ஜெ
துரியோதனன் மிக வலிமையான ஆளுமை. அவனை ஆட்டிப்படைக்கும்
உக்கிரமான விஷயங்களை தெய்வங்கள் என்று வெண்முரசு உருவகம் செய்திருக்கிறது. கலிதேவன்
அவனை ஆக்ரமித்திருக்கிறான். கலியின் தோற்றமாகவே அவன் விளங்கினான். இந்நாவலில் அவன்
அந்த அடையாளங்கள் இல்லாமல் சாதாரணமான மனிதனாக, நல்ல அண்ணனாக மட்டும் வருகிறான். அவன்
சொல்லும் சொற்களெல்லாமே முக்கியமானவை. அவன் இழப்புகள் வழியாகவே மெய்ஞானத்தை அடைந்துகொண்டிருக்கிறான்.
அவன் படும் துயரத்தை உணரமுடிகிறது
ராஜ்