Wednesday, October 17, 2018

சுபகம்





ஜெ

சுபகம் பற்றிய ஒரு சின்னக் கதைக்குள் வரும் கவித்துவமான உருவகங்களை தனித்தனியாகத் தொகுத்துக்கொண்டேன். அதன் சங்கிலி. அதை அந்த யானைதான் அசைக்கவே முடியும். மனிதன் ஆணையிட்டால் அது சங்கிலியை எடுத்து தானே பூட்டிக்கொள்ளும். அது அப்படி தன்னைத்தானே சிறையிட்டுக்கொண்டுதான் மனிதனுடன் இருக்கிறது


இன்னொரு உருவகம் யானையிடம் தன் பெயரை கம்ரன் சொல்வது. மிகமெல்லச் சொன்னாலே போதும், நினைத்தால்கூடப் போதும் யானை கேட்டுவிடும். யானைக்குள் இருக்கும் காட்டில்வாழும் இருண்ட தெய்வங்கள் அந்தப் பெயரைக் கேட்டுவிடுகின்றன.


அந்த இரண்டு தளைகளிலிருந்தும் போர்க்களத்தில் சுபகம் விடுபட்டுவிடுகிறது. அதற்கு அதன்பின் மனிதர்களே கண்ணுக்குத்தெரிவதில்லை. அதற்குள் குடியேறும் தெய்வங்கள் அதன்மேல் ஏறி அமர்ந்துவிடுகின்றன. சுபகம் தன் எல்லைகளை மீறும் காட்சி அபாரமான ஒரு அனுபவத்தை அளித்தது

எஸ்.ராஜேந்திரன்