Tuesday, October 16, 2018

போரின் சோர்வு




ஜெ

மந்திராலோசனையில் கௌரவர் தரப்பிலிருந்து சமரசத்துக்கான குரல் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெரிய இழப்புகள்தான் ஏற்படும், வெற்றி ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் ஆணவம் அதற்குத் தடையாக இருக்கிறது. போரின் நான்காம் நாளிலேயே போரின் சுயரூபம் தெளிவாக ஆனபின்னாடியும் அவர்கள் போர் செய்கிறார்கள். இரண்டு காரணம். ஒன்று ஆணவமும் தன்முனைப்பு. இன்னொன்று இத்தனை இழந்துவிட்டோம். இனிமேல் போய் என்ன சமாதானம் செய்வது என்ற எண்ணம்.

 என் இளையோர் மடிந்தது மண்ணுக்காக. வெறும் சொல்பெற்று அமைவதற்காக அல்ல என்று அதை துரியோதனன் சொல்கிறான். கடைசிவரை பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் வராமலிருந்ததும் இதனால்தான் என்கிறார்கள். அத்தனைபேர் செத்தபின் அவர்களை அப்படியே மறந்துதானே சமாதானம் பேசமுடியும் என்ற நிலைமையால்தான். அந்த கொந்தளிப்பையும் துயரத்தையும் காட்டியது அந்த அத்தியாயம்

சங்கரநாராயணன்