ஜெ
அர்ஜுனனின் போர்க்களக்காட்சி பல துண்டுகளாக பலருடைய காட்சி வழியாக வந்துகொண்டிருக்கிறது.
சஞ்சயன் சொன்னதிலிருந்து அது ஆரம்பிக்கிறது. பின்னர் அதை சுஜயன் பார்க்கும் காட்சி.
இதெல்லாமே வேறுவேறு கோணங்கள். சஞ்சயன் மிக அப்பாலிருந்து பார்க்கிறான். சுஜயன் எதிரே
நின்றுபார்க்கிறான். இப்போது கதன் உள்ளே இருந்து பார்க்கிறான். உள்ளிருந்து பார்க்கையில்
அந்தக்காட்சி வேறுமாதிரி உள்ளது. யதார்த்தமாக கிருஷ்ணன் இரு தூண்களின் பளபளப்பில் தெரிகிறார்.
அதைப்பார்த்து அர்ஜுனன்அவர் உதடுகளில் அசைவாகவெளிப்படும் செய்திகளைத் தெரிந்துகொள்கிறார்
என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் அதை கவித்துவமாக அர்த்தம் கொள்ளவேண்டும். அவன் நெஞ்சில்
எழுந்த கிருஷ்ணன்தான் அது. அவனைச் சூழ்ந்திருந்து வழிகாட்டும் கிருஷ்ணன்.
ராஜசேகர்