Saturday, October 20, 2018

நீலம்




அன்புள்ள ஜெ
      
 
நலமாக உள்ளீர்களாஇன்று தான் நீலம் முழுமையாக வாசித்து முடித்தேன்  நூலின் மொழியோட்டமும் செறிவும் ஒவ்வொரு வரியிலும் பித்து நிலையில் ஆழச்செய்தது.

கண்ணணின் வேய்குழல் நாதம் மட்டுமே செவியில் ஒலிக்க பித்துற்ற நிலையில்  நின்ற ராதைக்கு மட்டும் கேட்ட கானமாய் இருப்பதை வாசித்த போது என்னுள் நிறைந்ததை என்னால் இயன்ற அளவிற்கு மொழியிலாக்கினேன்....

கருவறை நோக்கி கல்லறை கடந்துபித்து ஏக்கப் பெருங்களியாய் கதிர் உண்ட அரவணாய் உச்சதில் களிகொண்டுதெவிட்டாத தொன் காதல் ஓடையின்விளிம்புகளில் முளையுற்ற தித்திக்கும் இளங்காமத்தினை ஒருசேர பருகி பருகி,சுவை மறந்து இளமையும் பாழ்முதுமையும் முதுமையின் இளந்தளிர் பொழுதையும் உதிரத்தின் செம்மையில் உவந்து உவந்து சொற்களற்ற உவகையாக்கி காலமேயாகி நின்றாடி தன்னை தான் மனந்து,பின் தானே பிறந்து அழிந்து அறியா பெருவெளியில் அமிழ்ந்துபெண்ணாய் பிறந்து வந்தேன் !

தங்கராஜ்