ஜெ
யாழிலிருந்து அசங்கன் வில்லுக்கு வரும் காட்சி நுட்பமானது. யாழ்நரம்பை தொட்டு
அடையும் அதே உணர்ச்சியை அவன் வில்நாணைத் தொட்டும் அடைகிறான். ஆனால் அதே உணர்ச்சிதானா?
இல்லை அந்த மெல்லிய உணர்ச்சிக்கு நேர்மாறான வேறொரு கீழ்மையான உணர்ச்சியா? ஆனால் அசங்கன்
முதலிய சாத்யகியின் மைந்தரின் இயல்புகள் ஆரம்பம் முதலே மென்மையானவையாகவே காட்டப்பட்டுள்ளன.
சாத்யகிக்கும் அவர்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அவர்கள் சாத்யகியை ஏற்று அவர்
மீதான அன்பினால்தான் அந்தப்போருக்கு வருகிறார்கள். அசங்கன் தந்தை மீது கொண்ட அன்பினாலும்
தம்பியர் மீது கொண்ட பாசத்தாலும் மெல்லமெல்ல சாத்யகி மாதிரியே ஆகிவிடுகிறான். அசங்கனின்
மெல்லிய இயல்பும் அதை அவன் தந்தைக்காக மாற்றிக்கொண்டதும் அழகான சித்திரம். இந்நாவலின்
முக்கியமான கதாபாத்திரமாக அசங்கன் இருக்கிறான்
ராஜ்