ஜெ
ஒரு
விஷயத்தை மறுக்கும்போது மிக ஆவேசமாக உச்சகட்டமாக மறுத்துவிட்டால் அதன்பின்னர் அதை மீண்டும்
மறுக்கமுடியாது. அதை திரும்பிச்சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது. அந்த மறுப்பு அத்துடன்
முடிந்துவிடும். அதன்பிறகும் நம்மை வற்புறுத்தினால் நாம் அதைச்செவிகொடுத்துக் கேட்டாகவேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக அதுக்கு நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். பேரம்பேசுவதில் இந்த
விஷயங்களை கவனித்திருக்கிறேன். வெண்முரசில் போர்க்களக்காட்சியில் சேக்தான யாதவன் இதைச்
சொல்லும் இடம் ஆச்சரியமாக இருந்தது. வெண்முரசில் பெரிய விஷயங்களை எல்லாரும் கவனிக்கிறார்கள்.
நான் இதைப்போன்ற சிறியவற்றை மட்டுமே கவனித்து வாசிக்கிறேன். இது எனக்கு முக்கியமானதாக
தோன்றுகிறது
ராஜேந்திரன்