வெண்முரசின் கட்டமைப்பு
அன்புள்ள ஜெ
டி நாகராஜன் எழுதிய வெண்முரசின் கட்டமைப்பு நான் பலமுறை கூர்ந்து வாசித்த கட்டுரை. உண்மையில் நாலைந்து கட்டுரைகள் இப்படி வெளிவந்ததுதான் என்னால் வெண்முரசை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள உதவியது. வெண்முரசை ஒட்டுமொத்தமாகவும் ஒவ்வொரு நாவலையும் தனித்தனியாகவும் ஆராய்ந்து இப்படிச் சில கட்டுரைகள் எழுதப்பட்டால் மட்டும்தான் நம்மால் இதைப்புரிந்துகொள்ளமுடியும்
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் உங்களுக்கே கூட இப்போதுதான் இந்தக்கட்டுரையெல்லாம் வரும்போதுதான் வெண்முரசு குறித்த ஒரு வடிவ ஒற்றுமை மனசிலே வருகிறது என்பதுதான். அதாவது நீங்கள் ஒரு பித்துக்கொண்ட நிலையிலே எழுதிக்கொண்டு செல்கிறீர்கள். அதை அறிவார்ந்த கோணத்தில் எவரேனும் சொல்லவேண்டியிருக்கிறது. இவ்வளவு யூனிட்டி வெண்முரசுக்கு முதற்கனல் முதல் இன்றுவரை இருந்துகொண்டே இருப்பதை நான் உணர்ந்ததே இல்லை/ வாசிக்கையில் அட ஆமாம் இல்லை என்ற பெரிய பிரமிப்பு உருவாகிறது. குறிப்பாக போர்க்களம் முன்னரே முதற்கனலில் வருவதை இன்றைக்குத்தான் வாசித்தேன். மிகச்சரியாக இப்போது வரும் உணர்ச்சிநிலைகள் அங்கேயே தொடங்கியிருக்கின்றன
முக்கியமான கட்டுரை. முக்கியமான வழிகாட்டி
சிவக்குமார் பழனி